சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (SLIATE) ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இன்று! சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் ஜூன் 14,உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ATI) பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தகவல் தொழில்நுட்ப பகுதித் தலைவர் ஏ.ஏ.எம். மதீஹ் அவர்களின் ஒத்துழைப்புடன் தகவல் தொழினுட்பஉயர் தேசிய டிப்ளோமா முதலாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு இன்று (14) இடம்பெற்றது. சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் குருதி வங்கி ஒத்துழைப்பு வழங்கியதோடு சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம்.ஹனிபா,சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர். நியாஸ் ஆகியோர் வைத்திய ஆலோசனைகளை வழங்கினர். சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபா மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம் ஆகியோர் இரத்த தான முகாம் இடம் பெறும் இடத்திற்கு வருகை தந்திருந்தார். இன் நிகழ்வு திறன்பட நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குருதி வங்கி வைத்திய அதிகாரிகள், தாதியஉத்தியோகத்தகர்கள்,ஊழியர்கள் மற்றும் உயர் தேசிய கணக்கியல்,உயர் தேசிய ஆங்கிலம் மற்றும் தகவல்தொழினுட்ப மாணவர்களுக்கும் ,அனுசரனை வழங்கியவர்களுக்கு பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா நன்றிகளை தெரிவித்தார். 2022 /2023 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளஇத்தருணத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதோடுவிண்ணப்பிக்கும் இறுதி திகதி 26.06.2023 என தெரிவித்தார்.
சுமார் 65ற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours