( வி.ரி.சகாதேவராஜா)


 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருக்கொடியேற்ற நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில், ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் தலைமையில் உற்சவம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

இந்த உற்சவம் 17 நாட்கள் நடைபெற்று  ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி ஆடிஅமாவாசை தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது. 

 இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் சிறிய கோயிலாக அமைக்கப்பட்டு பின்பு இராஜராஜ சோழன் காலத்தில் கற்கோயில் அமைக்க பெற்று நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு ஆடி அமாவாசை உற்சவமும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமும் பகலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டவிருக்கிறது.

பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை உற்சவம் என்பதால் இம்முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்காக  முன்னேற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைவர் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.

இம்முறை இதனை வெகு சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால் அண்மையில் அதிகாரசபைக்கூட்டம் நடாத்தப்பட்டு உபயகாரர்கள் முதல் மங்களவாத்தியம் வரை சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ்  மேலும் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours