சர்வதேச லயன்ஸ் கழகம் 306 சீ2 மாவட்டத்தின் ஆளுணர் சபை உறுப்பினராகவும், வலய தலைவராக சம்மாந்துறையை சேர்ந்த கெளரவ கலாநிதி ஏ.ஜே. எம்.ஹனீபா - MAF/JP நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் கடந்த 22ம் திகதி கொழும்பு மரீனோ பீச் ஹொட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சர்வதேச பணிப்பாளர் லயன் டாக்டர் மகேஷ் பஸ்குவால் - PMJF/PMAF/SLF அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டு
சர்வதேச லயன்ஸ் கழகம் 306 சீ2 மாவட்டத்தின் 2023/2024ம் வருடத்துக்கான ஆளுனராக தெரிவு செய்யப்பட்ட லயன் இஸ்மத் ஹமீட் - PMJF/PMAF/SLF அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
லயன் ஹனீபா கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட உறுபினர் என்பதுடன் அக் கழகத்தின் செயலாளராக, தலைவராக, இன்னும் பல பதவிகளை வகித்ததுடன் கடந்த 9 ஆளுணர்களினால் ஆளுணர் சபை பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு கழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தேவையுடையவர்களின் நலன்களுக்காகவும் பங்களிப்புச் செய்தவர் என்பதுடன் இவர் சர்வதேச, தேசிய, மாவட்ட /பிரதேச மட்ட அமைப்புக்களில் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours