(அஸ்ஹர் இப்றாஹிம்)
இந்திய அரசாங்கத்தின் கடனுதவித் திட்டத்தின் மூலம் வட மாகாணத்துக்கென 24 பேருந்துகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் கோரிக்கைக்கு அமைய அவற்றுள் வன்னி மாவட்டத்திற்கென 10 பேருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் முதற்கட்டமாக நான்கு பேருந்துகள் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரினால் மன்னார் சாலை முகாமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours