அபு அலா
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று (19) கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,சட்டம் ஒழுங்கு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சட்டவிரோத போதைப்பொருள் விநியோகம், சட்டவிரோத மீன்பிடித்தல், சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடு, மனித கடத்தல், மான் பூங்காக்கள் மீதான கண்காணிப்பு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண இராணுவத் தளபதி, கிழக்கு மாகாணத்தின் கடற்படை ரியர் அட்மிரல், கிழக்கு மாகாணத்தின் விமானப்படை தளபதி ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாரலில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநர் செயலக செயலாளர், முதலமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours