( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேசத்தில் சிறுதொழில் முயற்சி யாளர்களுக்கான வாழ்வாதார கடனாக அரைக்கோடி ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தம்பிலுவில்
சமுர்த்தி வங்கியின் வாடிகையாளர்களில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான
வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வானது வங்கி முகாமையாளர் எஸ்.சதிஷ் தலைமையில்
நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் கலந்து சிறப்பித்தார்.
மொத்தத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
தெரிவு
செய்யப்பட்ட மூன்று பயனாளிகளுக்கு ஒருவருக்கு ரூபாய் பத்து லட்சம் ரூபாய்
1000 000 /- பிரதேசெயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
நொறுக்குத்தீனி
தயாரிப்பு மற்றும் கொங்கிறீட் தயாரிப்பு உபகரணங்கள் வழங்கல் போன்ற
வேலைத்திட்டத்திற்காக தலா பத்து லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
ஏனையோருக்கு ஐந்து லட்சம் இரண்டு லட்சம் ஒரு லட்சம் என வழங்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours