( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்
பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன்
ஆலயத்திற்கான புதிய பெயர்ப்பலகை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
காரைதீவைச்
சேர்ந்த மார்க்கண்டு வித்தியானந்தன் அவரது அமரத்துவம் அடைந்த குடும்ப
உறவுகள் சார்பாக இந்த பெயர்ப்பலகையை வழங்கி இருக்கின்றார் .
பெயர்ப்பலகை
திறப்பு விழாவிலே ஆலய பரிபாலன சபையின் தலைவர் கி.ஜெயசிறில் , ஆலோசகர்
வி.ரி.சகாதேவராஜா, அனுசரணையாளர் மா.வித்தியானந்தன் முன்னாள் பிரதேச சபை
உறுப்பினர் த. மோகன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.
கல்முனை
அக்கரைப்பற்று பிரதான வீதியில் இருந்து மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு
வயல்வெளி ஊடாக செல்லும் பாதையின் ஆரம்பத்தில் இந்த புதிய பெயர்ப்பலகை
நடப்பட்டிருக்கின்றது.
Post A Comment:
0 comments so far,add yours