(அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்முனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக நிகழும் கடல் சீற்றத்தினால் ஏற்பட்டுள்ள அலையின் தாக்கம் காரணமாக கடற்கரையோரம் பாரிய கடலரிப்புக்குள்ளாகி வருகின்றது 

மருதமுனை,பாண்டிருப்பு, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர் மற்றும் அட்டப்பள்ளம் போன்ற பிரதேசங்கள் கடரிப்பினால் தினசரி காவு கொள்ளப்பட்டு வருகின்றது. 

கடலையே தமது ஜீவனோபாயமாக கொண்டுள்ள மீனவர்களும் அவர்களது மீன்பிடி தளங்களும்,மீன்பிடி உபகரணங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

தமது தோணிகள் ,மீன்பிடி படகுகளை தரித்து வைப்பதற்கோ இடமின்றி மிகவும் கஸ்டமான நிலமையை மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். 

இதே வேளை சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்கரை பூங்காவின் சுற்றுமதிலும் பாரிய கடரிப்பினால் சேதத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்த நிலமை தொடருமானால் கடற்கரை பிரதேசமொன்று இப்பகுதியிலிருந்து இல்லாமல் போனாலும் போகலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours