அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தினை முன்னிட்டு பட்டிருப்பு கல்வி
வலயத்தின் வலயமட்ட தமிழத் தின்போட்டி ஆரம்ப நிகழ்வு செட்டிபாளையம் மகா
வித்தியாலயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் தமிழர் பண்பாட்டு
அம்சங்களை எடுத்தியம்பும் வகையில் சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வில்
கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
தமிழ் மொழி பேசுகின்ற தமிழ் மாணவர்களின் மொழி ஆற்றலை மேம்படுத்துவதற்கான
இந்த தமிழ் மொழித் தினப்போட்டிகளை எமது கல்வி அமைச்சு வருடாவருடம்
நடாத்திவருகின்றது. ஏன் இந்த தமிழ் மொழிக்கு இவளவு முக்கியத்துவம்
கொடுக்கப்படுகின்றது என்ற கேள்வி எங்களுக்குள் எழலாம். கிட்டத்தட்ட சுமார்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சுவேரியன் நாகரிகம் என்ற நாகரீகம்
இருந்ததாக நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆனால் தற்போது நாங்கள் பேசும்போது
கூறுகின்றோம் எமது தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக்
கொண்டதென்று. ஆனால் உண்மையான விடயம் நாங்கள் அறிந்தது போன்று எங்களுடைய
தமிழ் மொழியினுடைய பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதல்ல.
நாங்களெல்லாம் கேள்வி பட்டிருக்கின்றோம். கடலுக்கடியில் மூழ்குண்டுபோன
எங்களுடைய தமிழர் பாரம்பரியம் நாவலர்தீவு அதைத்தான் நாங்கள் கூறுகின்றோம்
குமரிக்கண்டம் என்று சுமார் இக் குமரிக்கண்டம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்தமையானது தமிழர் என்ற பாரம்பரியத்தை எமக்கு கொடுக்கின்றது.
ஆகவே தமிழராக பிறந்த ஒவ்வொருவரும் எமது தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் பழமை வாய்ந்தது என்று சொல்லுவதை நிறுத்திவிட்டு எங்களுடைய தமிழர்
நாகரிகம் இருபதாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததென்று மார்பு தட்டி கூறுவதற்கு
நாங்கள் ஒவ்வொருவரும் கூறிக்கொள்ள வேண்டும்.
மூவேந்தர் என்று சொல்லப்படுகின்ற சேர,சோழ,பாண்டியர் காலமானது எங்களுடைய
தமிழர்களின் பல வரலாற்று சிறப்பம்சங்களை எடுத்தியம்புகின்றது. சங்கமமைத்து
தழிழைவளர்த்த இக் காலத்திலே பல நூல்களை ஆக்கி இந்த தமிழுக்கு சான்று
படைத்திருக்கின்றனர் இதனால்தான் தழிழர் என்ற இனமுண்டு அவர்களுக்கென்று
ஒருகுணமுண்டு என கூறுவார்கள் அந்த குணம் என்பது தமிழருக்குரிய தனித்தவமான
பெருமையை எடுத்தியம்புகின்றது. இப்படியான பொருமைக்குரியை மொழியை மறந்து
தமிழை சுத்தமாக பேசுகின்ற இனமாக அல்லாது தங்கிளிஸ் பேசுகின்ற தற்கால
யுகத்திலே நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றமையானது மிகவும்
வேதனையளிக்கின்றது..
நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எந்தவொரு இடத்திலும்
தாய்மொழியை பற்றுடன் பேசுகின்றவனே ஆராச்சியாளனாகவும்,
கண்டுபிடிப்பாளனாகவும் வருகின்றான். உதாரணமாக ஆங்கிலேயரை எடுத்துக்
கொண்டால் அவன் தனது தாய்மொழியினை பற்றுடன் கற்றதனாலையே இன்று பலதரப்பட்ட
கண்டுபிடிப்புக்களை இந்த உலகிற்கு கொடுத்துக் கொண்டு இருப்பதுடன்
பலதரப்பட்ட ஆரட்சிகளை மேற் கொள்கின்றவர்களாக இருக்கின்றானர். இதேபோன்று
நாமும் எமது தாய்மொழியில் பற்றுவைத்து கற்றுக்கொள்வதனால் பலதரப்பட்ட
சாதனைகளை நாங்கள் நிகழ்த்த முடியும்.
எனவே நாங்கள் ஒவ்வொருவரும் தாய்மொழி தமிழ் மொழி என்று கூறி பொருமை கொள்வதை விட உலகில் உள்ள அத்தனை மொழிகளுக்கும் தமிழ்மொழி தாய்மொழி என்று கூறுவதில் நாங்கள் மேலும் பெருமை கொள்ள வேண்டும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உலகிலுள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளிலும் எழுத்து வழக்கிலும், பேச்சுவழக்கிலும் செம்மொழியாக சொல்லப்படுகின்ற இரண்டேயிரண்டு மொழிகளில் எமது தமிழ் செம்மொழியும் ஒன்று என்ற பெருமைக்குரிய மொழியை கற்று ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்பதற்கிணங்க நாங்கள் ஒவ்வொருவாரும் வாழவேண்டும் என இதன்போது தெரிவித்தார்;;;;….பழுகாமம் நிருபர்
Post A Comment:
0 comments so far,add yours