(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் இந்திய ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது வாழ் நாள் சாதனையாளர் விருது பெற்றதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராட்டு தெரிவித்தார். 

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சில்  இன்று 04.07.2023 செவ்வாய்க்கிழமை
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என். எம். அமீன், இந்திய ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர்  இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அவர்களை சந்தித்து இந்தியாவில் நடக்கும் அரசியல் நிலவரங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களின் உடல் நலம் குறித்தும் கலந்துரையாடினார். 

மணிச்சுடர் நாளிதழில் சார்பில் வெளியிடப்பட்ட  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75 வது பவள மாநாடு மலரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொஹிதீன் சார்பில் மணிச்சுடர் ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது வழங்கி வைத்தார். 

 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் இந்திய மற்றும் இலங்கை இடையில் நட்புறவு உறவுக்காக ஊடக துறையில் சிறப்பாக பணியாற்றிமைக்காக இந்திய ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது அவர்களுக்கு வாழ் நாள் சாதனை விருது பெற்றமைக்கு  அமைச்சர் அலி சப்ரி பாராட்டுக்களை தெரிவித்தார். 

அதே வேளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களை அமைச்சர் அலி சப்ரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்தும் நலம் விசாரித்தார். 

இந்நிகழ்வில் தொழில்  அதிபர் அல்ஹாஜ் மஹ்ஸூம் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளர் ஜெம்ஸித், ஸ்ரீலங்கா
முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளர் எம். எம். ஜெஸ்மின், தொழில் அதிபர் ரவணசமுத்திரம் ஷேக் மீரான் ஆஆகியோர்கலந்து்கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours