நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று (10) திங்கட்கிழமை சர்வமத போதகர்களின் ஆசீர்வாத உரையுடன் கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். இவர் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை அரசாங்க அதிபராக இருந்து ஓய்வுபெற்றுச்சென்ற ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்களின் இடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக கடமையேற்ற சிந்தக்க அபேவிக்ரமவின் இப் பதவியேற்கும் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் அடங்களாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours