(எம்.ஏ.றமீஸ்)
கெப்சோ அமைப்பின் ஏற்பாட்டில் சமூகங்களுக்கிடையே உள்ள இடைவெளிகளை குறைத்து இன நல்லுறவினைக் கட்டியெழுப்பும் விஷேட வேலைத் திட்டத்தினை நடைமுறைப் படுத்தும் வகையில் சமூக மட்டத்தில் உள்ள துறைசார்ந்தவர்களை ஒன்றிணைந்து அவர்களின் காத்திரமான கருத்துக்களை கேட்டறியும் விஷேட கலந்துரையாடல் நிகழ்வு நேற்று அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றது.
கெப்சோ நிறுவனத்தின் திட்டப்பனிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.எல்.எம்.அக்ரம் உள்ளிட்ட மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், சிவில் சமூக முக்கியஸ்தர்கள், பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சமூக நல்லுறவினைக் கட்டியெழுப்பி சமூகங்களிடையே பரஸ்பர ஒற்றுமையான நிலைமையினை நிலையாகக் கட்டியெழுப்புவதற்கு எவ்வாறான வேலைத் திட்டங்களை அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ள முடியும் என்பதை பொது மக்களின் கருத்துக்கள் ஊடாக அறிந்து இதற்கான வேலைத் திட்டங்களை நடைமுறை படுத்துவற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடலாய் இந்நிகழ்வு இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சமூகங்களிடையே காணப்படும் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி வகைகளும் ஆராயப்பட்டன. இதுதவிர, இன மத நல்லுறவை மேம்படுத்துவதற்காகவும், சமூகங்களுக்கிடையே சமாதானத்தினை நிலைநாட்டி ஒற்றுமையினைக் கட்டியெழுப்புவதன் ஊடாக பிரச்சினைகளற்ற எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் வகையில் இவ்வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன.
Post A Comment:
0 comments so far,add yours