எஸ். சதீஸ் -
நாங்கள் இறைத்தூதோடு சேர்ந்து 42 வருடங்களாக சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த நாட்டில் பிரிவினை இல்லாமல், இலங்கை என்ற ஒரு கொடிக்கு கீழ் அனைவரும் வந்து இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். வீழ்ந்து போன இலங்கையை பிரார்த்தனையின் மூலமாகக் கட்டியெழுப்ப வேண்டும். என மிஸ்பா ஜெப மிஷனரி ஊழியத்தின் ஸ்தாபகரும், போதகரும், சுவிசேஷகருமான சகோ.ஜெயம் சாரங்கபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள் கிழக்கு ஊடக மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை(30.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆன்மீகம் ஒன்றே மனிதனை பிரிவினை இல்லாதபடிக்கு பலனைக் கொடுப்பது. இறைவன் எம் மீது அன்பாய் இருப்பது போன்று நாம் பிறர்மீதும் அன்பாய் இருக்க வேண்டும். இந்த நாட்டுக்கு அன்பு தேவை. கடவுளினுடைய அன்பு வருமாயும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வோம்.
நான்கு இன மக்கள் மூன்று பாசை பேசுகின்றோம். சிங்கள மக்கள் இந்த இலங்கையை அவர்கள் ஆளவேண்டும் என்று விரும்புகின்றார்கள். அவர்களுடன் நாம் ஒன்றிணைந்து கடவுளின் பிள்ளைகளாக சமாதனத்துடன் எங்கள் பிரதேசங்களில் நாங்கள் அதிகாரத்துடன் வாழ பிராhத்தனை செய்;கின்றோம். இஸ்லாமிய மக்களும் எம்சகோதரர்களே. அனைவரும் சகோதரர்களாக இருந்தால் இலங்கை கட்டியெழுப்பப்படும்.
இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே மூவின மக்களும் பிட்டும் தேங்காய்ப் பூவையும் போல இணைந்து வாழ்கின்றார்கள். நாங்கள் பிரிந்துவழ விரும்பவில்லை. இதற்காகவே இறைவனுடைய தூதை நாங்கள் கொண்டு வருகின்றோம்.
இறைவல்லமையுடன் இந்த தேசம் கட்டப்பட வேண்டும். விசேடமாக மட்டக்களப்பை கடவுள் ஆசீர்வதிக்க இருக்கின்றார். நிச்சயம் கிழக்கு மாகாணம் கடவுளின் ஆசீர்வாதத்திற்கு உட்பட்டே ஆகும்.
நாங்கள்; இஸ்லாமியர்களை நம்புகின்றோம். இஸ்லாமியர்களும் எங்களை நம்ப வேண்டும். பிரிந்து செயற்படக்கூடாது. அதே போன்று சிங்கள மக்களும் எங்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
விசேடமாக இந்த நாட்டிலே ஊடகவியலாளர்கள் பாதுகாக்;கப்பட வேண்டும். எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டும் கொலை செய்யப்பட்டும் இருக்கின்றார்கள். எத்தனையோ பேர் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தத் தூதைக் கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் செல்லுகின்றார். ஊடகவியலாளர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்தனையிலே ஈடுபடுவோம்.
நாங்கள் இறைத்தூதோடு சேர்ந்து சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இதனை நாங்கள் 42 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றோம்.
என அவர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours