எஸ்.சபேசன்


சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேலோங்கி இருந்தபோது அதனைச் சீரளிப்பதற்காகவே பேரினவாதச் சக்திகள் திட்டமிட்டு யூலைக் கலவரத்தினை ஏற்படுத்திய செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்

துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு யூலை தின நிகழ்வு 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை  துறைநீலாவணையில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது யூலைக்கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் ஞா.சிறிநேசன் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் காரைதீவுப் பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் தமிழசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் உட்பட தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்

40 வருடங்கள் கடந்தாலும் இந்த யூலைக்கலவரம் தொடர்பாக எமது இளைஞர்கள் அறிந்திருக்கவில்லை இதனை அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டிய தேவை எமக்கு உண்டு தமிழர்களின் உரிமைப்போராட்த்திற்கு வித்திட்ட இடம் துறைநீலாவணையாகும் இக்கிராமத்தில் இந்நிகழ்வு நடப்பது சாலப் பொருத்தமாகும் தமிழரசுக்கட்சியானது தமிழர்களின் உரிமைக்காகவே குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் கட்சியாகும் இதனை ஆதாரிக்காவிட்டால் எதிர்காலத்தில் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்

தமிழர்கள் எல்லைக்கிராமங்களில் வாழ்ந்த போது திட்டமிட்ட அடக்குமுறைகளினால் அவ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு அவ்விடங்களில் பெரும்பான்மை சிங்களமக்கள் குடியமர்த்தப்பட்டு இன்று அவ்விடங்களில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இன்றும் வடகிழக்கில் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ்மக்களின் சொந்த நிலங்கள் அரசு கையகப்படுத்தும் வேலைகளைச் செய்துவருகின்றனர் இவ்வாறான அடக்குமுறைகளை எமது எல்லைக்கிராமத்து மக்கள் அனுபவித்து வருகின்றனர்

2009 யுத்தம் நிறைவுபெற்ற பின் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் அவ்வாறு அடக்குமுறைகளையும் அபகரிப்புக்களையும் செய்துகொண்டிருக்கின்ற பேரினவாதத்தின் செயல்கள் யாவும் சரி என அரசின் கைக்கூலிகளாக இருக்கின்ற தமிழ் அமைச்சர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர் இவ்வாறான நிலை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழ்மக்களின் நிலை கேள்விக்குறியாகமாறிவிடும் எனவே தமிழ் மக்களையும் எமது நிலத்தினையும் பாதுகாக்கவேண்டுமாயின் தமிழரசுக்கட்சியினை பலப்படுத்தவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது என்றார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours