எம்.ஏ.றமீஸ்)
அதிபர் ஏ.பி.முதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது உதவி அதிபர் ஏ.எல்.சம்சுல் பழீலின் வழிப்படுத்தலின் கீழ் புத்தாண்டு தினத்தின் சிறப்புப் பற்றியும், புத்தாண்டு ஆரம்பிக்கும் முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் கடைப்பிடித்து நடக்க வேண்டிய மத விடயங்கள் பற்றியும், பிற மதத்தவர்களுடன் முஸ்லிம்கள் நல்லுறவினை ஏற்படுத்தி இன ஒற்றுமையினை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் மார்க்க அறிஞர்களால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட ஒன்றுகூடல் நிகழ்வின்போது மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆளணியினர் போன்றோருக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்ட மௌலவி கே .எல்.நைஸர் நழீமி இஸ்லாமிய வரலாற்றில் புதுவருடத்தின் சிறப்புக்கள் பற்றி விஷேட சொற்பொழிவு ஆற்றியதுடன், நாட்டில் நிலையான சமாதானம், இன ஐக்கியம் மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றன ஏற்பட வேண்டுமென வலியுறுத்தி விஷேட துஆப் பிரார்தனை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours