மட்டக்களப்பு
ஆசிரியர் கலாசாலை 91 /92 ஆம் ஆண்டு அணியின் மூன்றாவது ஒன்று கூடலும் ,
பணிநிறைவு பாராட்டு விழாவும் அணித்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில்
கடந்த(8) சனிக்கிழமை மல்வத்தையில் சிறப்பாக நடைபெற்றது.
அந்த
அணியின் உறுப்பினர்களான மல்வத்தையைச் சேர்ந்த அதிபர் பொன் நடராஜன் ஆசிரியை
திருமதி வசந்தினி நடராஜன் தம்பதியர் ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு
பெறுவதால் அவர்களுக்கான பணிநிறைவுபாராட்டு வைபவமும் நடைபெற்றது.
முன்னதாக
அறுபது வயதில் ஓய்வுபெற்ற நடா வசந்தி தம்பதியினரின் பிறந்த நாள் வைபவம்
இடம்பெற்றது. அந் நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் முன்னாள்
கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
முப்பது
வருடங்களுக்கு பின் இடம்பெற்ற இவ் ஒன்றுகூடலில் திருகோணமலை தொடக்கம்
திருக்கோவில் வரையான பிரதேசங்களில் இருந்து 39 ஆசிரியர்கள் உணர்வு
பூர்வமாக கலந்து மகிழ்ந்தனர்.
உறுப்பினர்களான சா.புண்ணியமூர்த்தி ஆ.புட்கரன் ஆகியோர் தாம் யாத்த வாழ்த்துப்பாமாலையை வாசித்து கையளித்தனர்.
அவர்களுக்கு முறையே கவிமாமணி அருட் கவியரசு ஆகிய விருதுகள் சான்றிதழில் வாசித்து வழங்கி வைக்கப்பட்டன.
ஆசிரியை சுகுணாவின் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடல் சாயலில் புதிதாக புனையப்பட்ட பாடலை பாடி பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்துரைகளை வழங்கினர்.
ஓய்வு பெற்ற தம்பதியினருக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகளும் வழங்கப்பட்டன.
அச்சமயம் நடாவின் தாயார் திருமதி பொன்னம்பலம் மாமனார் பொன்னம்பலம் இரு புத்திரர்கள் உள்ளிட்ட குடும்ப உறவுகளும் கலந்து கொண்டனர்.
அவ்வளவு
நேரமும் இந்த அணியைச் சேர்ந்த ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தீவிர
நண்பர்களான லண்டன் நண்டு நடா, ஜெர்மனி விஜயகலா, அவுஸ்திரேலியா முஸ்தபா ரவி
ஆகியோர் நிகழ்வு நிறைவுறும் வரை வீடியோ தொழினுட்பத்தில் பார்த்து
மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கென்று
அந்த புலன அணியை சேர்ந்த முப்பத்தொன்பது உறுப்பினர்கள் திருகோணமலை
தொடக்கம் திருக்கோவில் வரையான பிரதேசங்களில் இருந்து வருகைதந்து
சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours