காரைதீவைச் சேர்ந்த செல்வி தம்பிராஜா டிறுக்ஷா உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
கல்முனை
சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் முன்னாள் நிதி உதவியாளர்
கே.தம்பிராஜா மற்றும் விஷ்ணு வித்தியாலய அதிபர் திருமதி கலைவாணி தம்பிராஜா
தம்பதிகளின் மகளான தம்பிராஜா டிறுக்ஷா உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக
சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர்
சட்டமானி இளங்கலை,கொழும்பு பல்கலைக்கழக, சட்ட பீட பட்டதாரியாக (2ம்
வகுப்பு உயர்மட்டம்) வெளியாகி , இலங்கை சட்டகல்லூரியில் இறுதி ஆண்டு
பரீட்சையில் சித்தியடைந்து 2023.07.20ம் திகதியன்று சட்டத்தரணியாக
சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும்,
இவர் சர்வதேச தொடர்புகள் பற்றிய டிப்ளோமா கற்கைநெறி, மனித உரிமைகள்
மற்றும் ஜனநாயகம் தொடர்பிலான தொலை தூர டிப்ளோமா கற்கை நெறி என்பனவற்றையும்
பூர்த்தி செய்துள்ளார்.
இவர், காரைதீவு இ.கி. ச. பெண்கள் பாடசாலை மற்றும் விபுலாந்தா மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) கல்வி பயின்றுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours