(வி.ரி.சகாதேவராஜா)

திருக்கோவில் வலயத்திற்கான  2023 அகில இலங்கை தமிழ் மொழித்தின ஆரம்ப விழா  அக்கரைப்பற்று ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில்
 பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே. கமலமோகனதாசன்  தலைமையில் நேற்று முன்தினம்  சிறப்பாக இடம்பெற்றது.

  இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார் ,  ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர்                  பி.பபாகரன், வைத்தியர் திருமதி. குணாளினி ஆகியோர் பிரதம ஆதியாக கலந்து சிறப்பித்தனர்.

இப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காக  நாற்பதுக்கும் மேற்பட்ட பாடசாலைகள்  மாணவ, மாணவிகள் பங்குபற்றி அவர்களின் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.

மேலும் இந் நிகழ்வுகளுக்கு  வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், கல்வி மான்கள் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours