கடந்த கால யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமூகமாக இருக்கும் நாம் அரசினால் வழங்கப்படுகின்ற உதவிகளைப் பெறுவதில் அக்கறையற்றவர்களாகவும் உதாசினம் செய்பவர்களாகவும் இருக்கக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்
பொத்துவில் பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட குளங்களைப் புனரமைப்பதற்கு உலகவங்கியின் 75 மில்லியன் செலவில் புனரமைப்புச் செய்யும் திட்டத்தில் கோமாரி வால்குழி குளம் புனரமைப்பது தொடர்பான அப்பிரதேச மக்களுடனான கலந்துரையடல் முன்னால் பிரதேசசபை உறுப்பினர் சுபோகரன் தலைமையில் கோமாரி பல்தேவைக்கட்டிடத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் பேசுகையில்
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குளங்களை உலக வாங்கியின் 75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்புச் செய்து விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கோமாரி பிரதேச வால்குழிக்குளத்தினைப் புனரமைப்புச் செய்வதற்கு வன பாதுகாப்புத் திணைக்களம் அனுமதி மறுத்து வருகின்றது. அமைச்சருடன் பேசி மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தர தமிழரசுக்கட்சியினர் முயற்சிகளை மேற்கொள்வோம்
பொத்துவில் பிரதேசம் கடந்த கால யுத்தத்தினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் சமூகமே வாழுகின்றனர் இங்குள்ள நிலப்பரப்பும் தமிழர்களுக்கே அதிகமாகவே இருக்கின்றது உண்மையில் கஸ்டம் என்று நாம் இருக்காது பல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் .இங்குள்ள குளம் தொடர்பாக நான் அமைச்சரைச்சந்தித்து இந்தவிடயத்தை முன்வைக்க இருக்கின்றேன்.
நான் மூன்று வருடங்களாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் எங்களுக்கு நிதியில்லை ஆனால் விவசாய நடவடிக்கைக்கும் அதன் அபிவிருத்திக்கும் புலம்பெயர் வாழ் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம் அவர்கள் விவசாயத்திற்கு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
எங்களது சமூகத்தில் ஒற்றுமை இல்லை இதுவும் எமது இனத்தின் வளர்ச்சிக்குத் பெரும் தடையாக இருக்கின்றது என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும் அம்பாரை மாவட்டத்தில் பல குளங்கள் புனரமைக்கப்பட்டாலும் கோமாரி வால்குழிக்குளம் புனரமைக்கவில்லை என்ன குறைபாடு இருக்கின்றது இக்குளம் வனபரிபாலன சபையின் கட்டுப்பாட்டில் இருப்பது முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது இதனை விரைவில் அமைச்சருடன் பேசி; வால்குழிக்குளத்தினை விவசாயிகளுக்குப் பெற்றுத்தர முயற்சிப்பேன் என்றார். அதே வேளை இக்குளத்தினை நம்பி வாழும் 250 விவசாயிகளையும் அவர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours