( வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை
வலய விளையாட்டு போட்டியின் துவக்க விழா நேற்று (26) புதன்கிழமை
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் சம்மாந்துறை வலய
உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.நசீர் தலைமையில் சிறப்பாக
நடைபெற்றது.
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கலந்து சிறப்பித்தார்.
முன்னதாக அதிதிகள் அனைவரும் பான்ட், கடேற், பொல்லடி சகிதம் வரவேற்கப்பட்டார்கள்.
துவக்க விழாவில் பிரதி உதவி கல்வி பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் வளவாளர்கள் அதிபர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொண்டார்கள்.
விளையாட்டு விழாவை பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் பிரகடனம் செய்து ஆரம்பித்து வைத்தார்.
சம்மாந்துறை
முஸ்லிம் மத்திய கல்லூரியின் உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் சம்மாந்துறை
சொறிக்கல்முனை ஹொலிக்குறோஸ் மகா வித்தியாலய பாண்ட் கண்காட்சி பலரையும்
ஈர்த்தது.
துவக்க விழாவை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours