கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் (தேசிய பாடசாலை) சுமார் ஜந்து வருடங்களாக கல்விசாரா ஊழியர் (விடுதி சமையல்) கடமையாற்றி ஒய்வு பெற்ற கே. சுகந்தி மற்றும் கல்லூரியில் பத்து வருடத்துக்கும் மேற்பட்ட காலம் ஆசிரியை பணியினை திறம்பட சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியைகளான எம்.எப்.
நிலாமியா (புவியியல் பாடம்), எம். யூ. ஹாலிஷா பர்வின் (வரலாறு - குடியியற்கல்வி), எம்.எல்.பி. பாத்தும்மா (அரசியல் விஞ்ஞானம்) ஆகியோர்களுக்கு சேவை நலன் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் கல்வியற்கல்லூரியில் இருந்து வெளியாகி புதிய நியமனம் பெற்று ஆசிரியர்களாக இணைந்து கொண்டவர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வும் ஆசிரியர் சங்க ௯ட்டமும் கடந்த சனிக்கிழமை
சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் கல்லூரியின் அதிபா் யூ.எல்.எம். அமீன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours