__
சிங்கள தேசத்தில் இருப்பவர்களுடைய மூளை எல்லாம் தமிழர்களை ஒழித்துகட்ட வேண்டும் என செயற்படுகின்றனர். எனவே தமிழ் இனத்துக்காக செயற்படுகின்ற கட்சிகள் புலம் பெயர்ந்த உறவுகளின்; அமைப்புக்கள் ஒன்றாக பலமாக இருக்க ஒரு குடையின் கீழ் அணிதிரளவேண்டும் இல்லை என்றால் மக்களையும் தேசத்தையம் காப்பாற்ற முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நா. உறுப்பினருமான செல்வம் அடைக்கலநான் தெரிவித்தார்.
வெலிக்கடைச்சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர் குட்டிமணி, தங்கதுரை 40 வது ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தினத்தையிட்டு மட்டக்களப்பு ரெலோ காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (29) இடம்பெற்ற நினைவேந்தலில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் தமிழ்கள் மீது 1957 ல் கலவரம் அதன் பின்பு 1978, 1983 தொடர்ச்சியான கலவரங்களை பார்த்தால் அவர்களுடைய மூளையிலே சிந்திக்கின்ற விடையம் தமிழர்களை ஒழித்துகட்டுவதே தவிர மாறாக பொருளாதாரத்தில் மிக மோசமான சூழலை சந்தித்திருக்கின்ற நாட்டை பொருளாதார ரீதியில் செப்பனிடுகின்ற செயற்பாடுகளில் கவனம் செலுத்தாது தமிழர்களை அழித்தொழிப்பதே அவர்களினது செயற்பாடாக உள்ளது
இப்போது பாhத்தால் மனித குரங்கு தன்னுடைய செயற்பாட்டில் தனது மார்பை தட்டுவது போல தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை அவர்கள் கொண்டாடுகின்ற அல்லது தமிழர்களுக்கு ஒன்றுமே கொடுக்க கூடாது என சிங்கள மக்களுக்கு தமிழர்கள் எதிரியாக காட்டுகின்ற ஒரு செயற்பாட்டை தான் இலங்கை அரசில் இருக்கின்ற சில தலைவர்கள் செய்கின்றனர்.
தொடர்ச்சியாக வரலாற்றை பார்த்தால் தமிழர்களை இல்லாது ஒழிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ந்து இருக்கின்றது இப்போது வடக்கு கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பூர்வீக வரலாற்றை சிதைக்கின்ற திட்டமிட்ட செயற்பாடாக தொல்பொருள் இடத்தை கண்டுபிடித்தால் அதனை பாதுகாப்பது தன் அதன் கடமை அதைவிடுத்து அங்கு புத்த விகாரைகளை அமைத்து நில அபகரிப்புக்களை செய்கின்றனர்.
இவ்வாறு நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்திருக்கின்ற செயற்பாட்டை மறந்து அதனை சிந்திக்கது எங்களை நசுக்குகின்ற செயற்பாடுதான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றது என்பதுடன் வரலாறு அப்படிதான் செல்லுகின்றது எங்கள் தமிழ் இனத்தை ஒழிக்கவேண்டும் என செயற்படுகின்ற தலைவர்களாகதான் இன்று சிங்கள தேசத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்..
ஆகவே இதை நாங்கள் தொடர்ந்தும் பார்த்துக் கொள்ள முடியாது ஏன் என்றால் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை எங்களுக்குள்ளே வலுவான ஆயுத போராட்டத்திலே வாய்திறக்காதவர்கள் எல்லாம் இப்ப திறக்கின்றனர். சரத்வீரசேகர மிக மோசமாக கச்சிக்கின்றார்.
இந்த நாள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் நாள் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் எங்கள் போராட்டத்தின் உச்ச கட்டம் ஜே,ஆர்.ஜெயவத்தனாவை அடிபணிய வைத்தது அதனால் 13 திருத்தசட்ட முறைமை வந்தது அதைகூட இப்போது சட்டத்திலே இருக்கின்ற ஒரு விடையத்தை நடைமுறைப்படுத்தாது அதை மீறுகின்ற செயலில்; அரசு இருக்கின்றது
இந்த அரசியல் சாசனத்தில் இருக்கின்ற சட்டத்தை சாதாரண குடிமகன் மீறுகின்ற போது அவர்கள் சிறை செல்லுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றது எமது இளைஞர்கள் அப்படிதான் அரசில் சாசனத்தில் சொல்லப்படுகின்ற விடையங்களை மீறி செயற்படுகின்தால் சிறைவாசம் சென்றிருக்கின்றார்கள்
ஆனால் தலைவர்கள் இப்போது மீறுகின்றனர் ஜனாதிபதி நாடாளுமன்றில் பேசம் போது வெளியில் புத்த பிக்குகள் 13 திருத்த அரசசானத்தை எரிக்கின்றனர் அவர்களுக்கு சட்டம் நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டதா? இல்லை ஆனால் தமிழர்கள் ஒரு இனத்தின் சார்பாக போராடுகின்ற போது அவர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தும் செயற்பாட்டை இங்கு இருக்கின்ற பொலிசார் மிக சாதுரியமாக செய்கின்றனர். அவர்களுடன் முப்படைகளும் எங்களுக்கு எதிரான நடவடிக்கையில் தான் இருக்கின்றனர்.;
இன்று நீர்குழாய்களுக்காக நிலத்தை தோண்டுகின்ற மற்றும் கட்டிடம் அமைக்க நிலத்தை தோன்றுகின்ற இடமெல்லாம் மனித எச்சங்களுடைய துவில்கள் இருந்து கொண்டிருக்கின்றது எங்களுடைய இனத்தை ஒழித்துகட்டுகின்ற செயற்பாட்டை செய்கின்ற இந்த அரசாங்கம் எப்படி எங்கள் இனப் பிரச்சனை தீர்விலே தன்னுடைய கடமையை செய்யும்.
அரசியல் சாசனத்தை மீறுகின்ற ஜனாதிபதி உட்பட ஏனையவர்கள் எப்படி இந்த அரசியல் சாசனத்தை முறையாக செய்யமுடியம் என்ற கேள்வியுள்ளது.
இந்தியாவிற்கு கடிதம் எழுதுவதில் எங்களுடைய கட்சிகள் மூன்று நான்கு பிரிவுகளாக கடிதங்களை கொடுத்தனர் இது மிகவும் அவமானப்படுகின்ற வெக்கி தலைகுனிகின்ற செயல் அதன் எதிரொலி ஜனாதிபதி சொன்னார் நீங்கள் ஒற்றுமையாக வந்தால் இன பிரச்சனையை தீர்க்கமுடியம் என்றார்.
எனவே நாங்கள் எல்லாம் இனத்தின் சார்பாக கட்சிகளை நடத்துகின்ற கட்சிகள் எங்களுடைய நிலம், எங்களுடைய இயக்கங்கள் முக்கியமாக போராடிய அந்தந்த இயக்க போராளிகளும் இந்த நிலத்தை மீட்பதற்காக உயிரிழந்தனர் பொதுமக்கள் உயிரிழந்தனர் அவர்கள் உயிரிழந்த அந்த இடங்களில் நின்று கொண்டு நாங்கள் என்ன சொல்லுகின்றோம் நிலம் பாதுகாக்கப்படவேண்டும் இன பிரச்சனை தீர்கப்படவேண்டும் ஆனால் அதை உதட்டலளில் சொல்லுகின்ற ஒரு வெக்க கேடான செயற்பாட்டை பார்க்கூடியதாக இருந்தது.
ஆகவே எங்கள் தலைவர்கள் கொல்லப்பட்ட இதே நாளிலே நான் ஒரு அறை கூவலை விடுகின்றேன் வெறும் வெட்டுப் பேச்சுக்களுக்கும் வெறும் உதட்டளவில் பேசுகின்ற சந்தர்பங்களை இனியும் பேசாதீர்கள் இன்று நாங்கள் ஒன்றாக இணைய வில்லை என்றால் ஒன்றாக பலமாக இருக்க வில்லை என்றால் எங்களுடைய தேசத்தையம் மக்களையும் காப்பாற்ற முடியாது வெறும் வெட்டுப் பேச்சு பேசுகின்றவர்களாகதான் கட்சிகள் இருப்;போம்.
எனவே எங்களுக்குள் பல வேற்றுமைகள் இருந்தாலும் புலம் பெயர்ந்த தேசத்திலுள்ள மூன்று நான்கு பிரிவுகளாக இருக்கின்ற அவர்களும் ஒன்றினைய வேண்டும் அவர்களுடன் நாங்கள் ஒன்றினைய வேண்டும் ஒரு குடையின் கீழ் அணிதிரளவேண்டும் இல்லாவிடில் எங்கள் இனத்தை யாரும் காப்பாற்ற முடியாது.
ஆகவே தனிப்பட்ட கட்சி சின்னத்திலே தனிபட்ட கட்சிக்கு பின்னாலே கூட்டமைப்பு என கூறமுடியாது ஆகவே மக்களுடைய விடுதலை என்று கருதுபவர்கள் பொது சின்னத்தில் இனையவேண்டும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அதை தொடர்ந்து செய்யும் இனப்பிரச்சனைக்காக தீர்வு இந்த 13 வது திருத்த சட்டத்தினுடைய பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகாரங்களை கொடுக்கின்ற வாய்ப்பை உருவாக்கினனால் எங்கள் புலம்பெயர்ந்த உறவிகளின் முதலீடுகளை நாங்கள் கொண்டுவர முடியம் இந்த நாட்டை தூக்கி நிமிர்து;துகின்ற வாய்ப்பை உருவாக்க முடியம் எங்கள் கையில் பலம் இருக்கின்றது அதை பயன்படுத்த தவறுகின்றோம்.
அப்படி போராடி கிடைக்க வில்லை என்றால் வடக்கு கிழக்கை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளுகின்ற சந்தர்பத்தை கோரலாம் அவ்வாறு கோருகின்ற போது எங்களுடைய சுதந்திரத்தை இறையான்மையை பாதுகாக்க முடியும்.
சிங்கள தேசம் படுகொலைகள் செய்கின்ற சிந்தனையுடன் இருக்கின்றனர் இரத்தத்தை குடிக்கின்ற சிந்தனையுடன் இருக்கின்றனர் அவர்களின் சிந்தனை ஒருபொதும் மாறாது என்பதை கடந்த கால வரலாறுகள் சொல்லுகின்றது எனவே அந்த விடையத்தில் இப்படியான முடிவை எடுத்தால் என்ன என்ற கேள்வியை மக்களிடம் விடுகின்றேன் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours