நூருல் ஹுதா உமர்

மனித அபிவிருத்தி தாபனத்தால் அம்பாறை மாவட்டத்தில் சகவாழ்வு சங்கங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டத்தின் ஒரு செயற்பாடாக மொழியுரிமை பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றது.

மாவட்டத்திலுள்ள  அரச, தனியார் காரியாலயங்கள், பொது இடங்கள் போன்றவற்றுக்கு நேரடியாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், பதாதைகளை காட்சிப்படுத்தியும் இவ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகின்றது.  

மனித அபிவிருத்தி தபான உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால் தலைமையில்  நடைபெற்ற இப் பிரச்சார நிகழ்வில் சகவாழ்வு சங்கங்களின் பிரதிநிதிகளாக எம்.ரிலீபா பேகம், பி.மனோரஞ்சினி, எஸ்.தங்கராணி, இசட் .எம். நஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours