சுமன்)


அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குளங்களை உலக வாங்கியின் 75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்புச் செய்து விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கோமாரி பிரதேச பால்குடிக்குளத்தினைப் புனரமைப்புச் செய்வதற்கு வன பாதுகாப்புத் திணைக்களம் அனுமதி மறுத்து வருகின்றது.

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீPழ் வரும் இக்குளமானது புனரமைப்புச் செய்யப்படுமிடத்து சுற்றுயுள்ள 250 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யக்கூடிய நிலைமை ஏற்படும்.

மேற்படி குளத்தின் புனரமைப்பு தொடர்பில் அனுமதி மறுக்கப்பட்டமையை பிரதேச மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தமையையிட்டு மேற்படி பிரதேசத்திற்குக் களவிஜயம் மேற்கொண்டு குளத்தினையும், குறித்த விவசாய நிலங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டிருந்தார்.

அதiனைத் தொடர்ந்து முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுபோகரன் தலைமையில் கோமாரி பல்தேவைக் கட்டடித்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச மக்களுடனான கலந்துரையாடலிலும் கலந்த கொண்டு குறித்த விடயம் தொடர்பில கலந்துரையாடப்பட்டது.

இதன்போது வனபாதுக்காப்பு அமைச்சருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடி உரிய அனுமதியைப் பெற்று இக்குளத்தினைப் புனரமைப்பச் செய்வதற்கு ஆவன செய்து வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours