இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சற்று முன் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை

அதன்படி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.

எனவே, பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 28ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours