(எம்.எம்.றம்ஸீன்)


ஓய்வுபெற்ற எஸ்.எல்.மன்சூர் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வலயக் கல்வி அலுவலக கல்விசார் உத்தியோகத்தர்கள்; நலன்புரிச் சங்கத் தலைவரும், வலயக் கல்விப் பணிப்பாளருமான அஷ்-ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பா, நினைவுப் பரிசு, பொற்கிழி வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார். 
 
இந்நிகழ்வில் பிரதி, உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.பஸ்மில், ஆசிரிய நிலைய முகாமையாளர் ஏ.எல்.சமீம், ஆசிரிய ஆலோசகர்கள், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.றிம்ஸான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

 
.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours