யாழ் மாவட்டத்தில் அதிகாலை மற்றும் இரவில் வீடுகளுக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை நல்லூர் பின் வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று திங்கட்கிழமை (28) மாலை 4 மணியளவில் மடக்கி பிடித்து கைது செய்ததுடன் கொள்ளையிட்ட 28 பவுண் தங்க ஆபரணம் ஒரு மோட்டார் சைக்கிள், வாள், 4 கையடக்க தொலைபேசி என்பன மீட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ,மேனன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் கடந்த வாரம் இரவு மற்றும் அதிகாலையில் வீடுகளின் கூரையை உடைத்து உள்நுழைந்து வீட்டில் உள்ளவர்களை கத்தியை கழுத்தில் வைத்து அச்சுறுத்தி தங்க ஆபரணங்களை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து வந்துள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் 5 முறைப்பாடு கிடைத்துள்ளது
இந்த சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு இரகசிய தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டுதலில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ,மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று மாலை 4 மணிக்கு கொள்ளைகும்பல் பதுங்கியிருந்த நல்லூர் பின் வீதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.
இதன் போது பதுங்கியிருந்த அந்த பகுதியைச் சேர்ந்த 4 கொள்ளையர்களை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் சங்கிலியன் வீதி பகுதியில் கொள்ளை யடிக்கப்பட்ட 24 பவுண் மற்றும் இணுவில் பகுதியில் கொள்ளையிடப்பட்ட நான்கு பவுண் உட்பட 28 பவுண் தங்க ஆபரணங்களையும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், வாள், 4 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரச உத்தியோகத்தரின் வீட்டுக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டி தங்க ஆபரணங்களை கொள்ளையடித்ததுடன் கல்வியக்காட்டு பகுதியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை கத்தி காட்டி மிரட்டி பணம் கொள்ளையிட்டுள்ளதுடன்
பாற்;பண்ணை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டி நகை கொள்ளை அடிக்க முயன்றுள்ளதாகவும் இணுவில் பகுதியில் வயோதிபர்கள் இருந்த வீட்டுக்குள் புகுந்து கத்தி காட்டி நகை கொள்ளை அடித்துள்ளதாகவும் நல்லூர் பின் வீதியால் செல்லும் வயது முதிர்ந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி கைத்தொலைபேசி, பணங்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours