(கனகராசா சரவணன்
தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் 4 காணிகளில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை உடவலவ விசேட அதிரடிப்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலையில் முற்றுகையிட்டு 5 அடி உயரம் கொண்ட 20 ஆயிரத்து 674 கஞ்சா செடிகளை பிடஞ்கி அழித்துள்ளதுடன் ளுடன் 3 பேரை கைது செய்ததுடன் கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
உடவலவ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிலுள்ள 4 கஞ்சா தோட்டங்களை சம்பவதினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலையில் விசேட அதிரடிப் படையின் முற்றுகையிட்டனர்.
இதன்போது கஞ்சா செய்கையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் அங்கு 20 பேசர்ச் காணியில் 05'06' உயரம் கொண்ட 4358 கஞ்சா செடிகளும், 10 பேர்ச் காணியில் 05'09' உயரம் கொண்ட 2178 கஞ்சா செடிகளும்;, 30 பேர்ச் காணியில் 05' உயரம் கொண்ட 6751 கஞ்சா செடிகளும், 30 பேர்ச் காணியில் 04' 04' உயரம் கொண்ட 7387 கஞ்சா செடிகளுமாக 20 ஆயிரத்து 674 கஞ்சா செடிகளை பிடிஞ்கி அழித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours