(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியால் தேவாலயம் உட்பட இரு வேவ்வேறு  சம்பவங்களில் பெண்களுடைய கழுத்தில் இருந்த 3¼  பவுண் தங்க ஆபரணங்களை அறுத்து கொள்ளையிட்ட பெண் கொள்ளைக்குழுவைச் சேர்ந்த 4 பெண்களையும் மற்றும் ஆலைத்தில் சந்தேகத்துக்குகிடமாக நடமாடிய பெண்கள் உட்பட 9 பேரை இன்று செவ்வாள்கிழமை கைது செய்துள்ளதாகவும் ஒரு பெண் தப்பி ஓடியுள்ளதுடன் ஆலையத்தில் 5 பேருடைய 19 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாக மட்டு தமையைக பொலிசார் தெரிவித்தனர்.

நகர் மத்திய வீதியிலுள்ள மரியால் தேவாலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் திருவிழா சம்பவதினமான இன்று காலை  9 மணியளவில் திருப்பலி ஒப்பு கொடுத்து ஆராதனை இடம் முடிவுற்ற பின்னர் தேவாலய பகுதியில் தானமாக கஞ்சி வழங்கி கொண்டிருந்த போது அதனை வாங்கி கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 2 அரை பவுண் கொண்ட தங்க சங்கிலியை 4 பேர் கொண்ட பெண் கொள்ளைக் குழுவினரைச் சேர்ந்த  ஒரு பெண் கொள்ளையர் அறுத் தொடுத்ததையடுத்து அவர் கள்ளன் என சத்தமிட்டுள்ளாh.;

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முற்பட்ட பெண் கொள்ளைக்குழுவைச் சேர்ந்த 3 பெண்களை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடித்தனர் இதன்; போது ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து மடக்கி பிடித்த பெண் கொள்ளையர்களை பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவர்களை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு வத்தளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட , 27, 33 வயதுடையவர்கள் எனவும்  மூன்று பேரும் உறவினர்கள் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதேவேளை மாமாங்கேஸ்வரர் ஆலைய தேர்திருவிழாவான இன்று காலை பக்தர்கள் தேர் இழுத்து கொண்டிருந்தபோது  முதிய  பெண் ஒருவரின் கழுத்தல் இருந்த ¾   முக்கால் பவுண் தங்க சங்கிலியை அறுத்தெடுத்த புத்தளம் பகுதியைச் சோந்த 45 வயது பெண் ஒருவரை கைது செய்ததுடன் இவர் ஏற்கனவே களுவாஞ்சிக்குடி மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

இவ் இரு வௌ;வேறு சம்பவங்களில் 4 பெண்களும் மாமாங்கேஸ்வரர் ஆலையத்தில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய திருக்கோவில் கஞ்சரம்குடாவைச் சேர்ந்த 2 பெண்கள் ஆண் ஒருவர் மற்றம் வவுனியா மற்றம் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

அதேவேளை  ஆலைய தேர் திருவிழாவில் பிரபல வர்;தகர் ஒருவரின் 7 பவுண் தங்கசங்கிலி, மற்றும் 4 பெண்களுடைய 4 பவுண், 2 பவுண், 3 பவுண், 2¾  பவுண் கொண்ட 18 ¾  பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாகவும் ஆலைத்தில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய  முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours