(அஸ்ஹர் இப்றாஹிம்)


நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டுக் கழகத்திற்கும் மாவடி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான சினேகபூர்வ  கடினபந்து கிறிக்கட் போட்டியொன்று அண்மையில் நிந்நவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டுக் கழகம்  முதலில் துடுப்பெடுத்தாடி 17 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சிஜாம் 51 ஓட்டங்களையும், அஜ்மல் 24 ஓட்டங்களையும் பெற்றதுடன்,  பந்து வீச்சில் அம்ஜத் 3  ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும்,  இன்ஸமாம் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டையும்
, அஸ்ஹான் 4 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினையும் கைப்பற்றினர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாவடி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகம்  17 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours