(கனகராசா சரவணன்;)

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பில் மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு இன்று செவ்வாய்க்கிழமை (22) சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒட்பட 18 பேர்  பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினர் வழிமறித்து  தடுத்து வைத்தனர்.

குறித்த பிரதேசத்தில் காணி அபகரிப்பு மற்றும் விகாரை அமைப்பது தொடர்பாகவும் பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பலசமய மத தலைவர்கள் ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் சம்பவதினமான இன்று காலை மயிலத்தமடு மாதவனை பிரதேசத்திற்கு  வாகனங்களில் இரு வணபிதாக்கல், ஒரு மெனளலி, இரு இந்து குருக்கள் 3 ஊடகவியலாள்கள் உட்பட 18 பேர் சென்று பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டு பகல்  ஒரு மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு எல்லை பகுதியில் அமைந்துள்ள கம்பி பாலத்தில் அருகாமையில் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்த பலசமய மத தலைவர்களின் வாகனங்களை கம்பி பாலத்தில் குறுpக்கே  தேர் ஒருவருடனான நூற்றுக்கு  மேற்பட்வர்கள் ஒன்றினைந்து வீதி தடையை போட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களின் திறப்புக்களை பிடுங்கி எடுத்து அவர்களை தடுத்து வைத்ததுடன் இந்து குருக்கள் ஒருவரை தாக்க முற்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இச் சம்பவத்தையடுத்து கரடியனாறு மற்றும் அரங்கலாவ பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கொண்ட பொலிஸ் குழுவினர் அந்த பகுதிக்கு சென்று  பௌத்த தேரர் உடனான குழுவினருடன் பேச்சில் ஈடுபட்டுவருதவாகவும்  அவர்கள் ஊடகவியலாளர்களின் கமராவில் பதிவு செய்த காட்சிகள் அனைத்தையும் தேரர் அச்சுறித்தி அழித்ததுடன் இந்த செய்திய பிரசுரிக்க கூடாது என கடிதம் ஒன்றை வற்பறுத்தி பெற்றுள்ளனர்

தொடர்ந்தும் பௌத்த தேர் உடனான குழுவுடன் பொலிசார் பேச்சவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் 6 மணித்தியால தடுத்துவைப்பின் மாலை 6 மணிக்கு விடுகவிக்கப்பட்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours