(கனகராசா சரவணன்  


மட்டக்களப்பில் சவுதியரேபியாவுக்கு  வேலை வாய்ப்பு பெற்று தருவதாக இருவரிடம் ஒரு இலச்சத்து 60 ஆயிரம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த இருதயபுரம் பிரதேசத்தைச் சோந்த சட்டவிரோத சப் ஏஜன்சியாக செயற்பட்டு வந்த ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (18) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் சவுதியரேபியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஒரு இலச்சம் ரூபாவும் இன்னொருவரிடம் 60 ஆயிரம் ரூபா உட்பட ஒரு இலச்சத்து 60 ஆயிரம் ரூபாவை வாங்கி கொண்டு கடந்த 7 மாதங்களாக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றி வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து குறித்த சப் ஏஜன் போலி முகவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பொலிசார் விசாரணையின் பின்னர் மோசடியில் ஈடுபட்ட  அவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவரை இன்று சனிக்கிழமை மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours