காரைதீவு
கோட்டத்துக்குட்பட்ட மாளிகைக்காடு அல்-ஹூசையின் வித்தியாலயத்தில் 30
வருடங்கள் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றிய
அல்-ஹாஜ்.ஏ.எல்.எம்.ஏ.நளீர் 60 வயதில் நேற்று ஓய்வு பெற்றார்.
புதிய அதிபராக முன்னாள் பிரதி அதிபர் மொகமட் நளீம் நியமிக்கப்பட்டார்.
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் முன்னிலையில் பதவி ஏற்பு வைபவம் நேற்று (28) திங்கட்கிழமை நடைபெற்றது.
பாடசாலை
அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு ஓய்வு பெற்ற அதிபர்
நளீரை பொன்னாடை போர்த்தி வாழ்த்தியதோடு புதிய அதிபரை வரவேற்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours