(எம்.எம்.றம்ஸீன்)


தரம் 4 சுற்றாடல் பாடத்தின் எமது உணவு அலகின் "தரமானதும் மருத்துவத்தன்மை கொண்டதுமான பான வகைகளை நுகரப் பழகுவார்" எனும் தேர்ச்சியினூடாக “இலைக்கஞ்சியை” மாணவருக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தலைமையில் ஆரம்பக்கல்வி பகுதித்தலைவர்  டீ.கே.எம்.மௌசீன் அவர்களது ஆலோசனையுடன் தரம் 4 வகுப்பாசிரியை செல்வி  எஸ்.றுஸ்தா பர்வின் அவர்களது வழிகாட்டலின் கீழ்   "இஸ்லாமாபாத்தின் இலைக்கஞ்சி இல்லம்-2023" எனும் தொனிப்பொருளில்  பாடசாலை வளாகத்தில்  சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா விஷேட அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours