(  வி.ரி. சகாதேவராஜா)

 வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (16) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவர்த்தனவின் பங்கேற்றலுடன் நண்பகல் 12 மணியளவில் சமுத்திரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

 ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த தீர்த்தோற்சவத்தில், கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம்,  திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ், திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 
தந்தையை இழந்தவர்கள் தர்ப்பணம் செலுத்தி பிதிர்க்கடன் செய்வதற்கு சிவாச்சாரியார்கள் சகிதம் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

போக்குவரத்து மின்சாரம் சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் தீர்த்த ஒழுங்கு சகல ஏற்பாடுகளையும் முறையாக செய்யப்பட்டிருந்தது.

 ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் குருக்கள் மற்றும் பிரதம குரு சிவஸ்ரீ திருக்குமரக் குருக்கள் தலைமையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக தீர்த்தோற்சவம் இடம் பெற்றது.

கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் உற்சவம் நேற்று 16ஆம் தேதி புதன்கிழமை தீர்த்தோற்சவம் இடம் பெற்று நிறைவடைந்தது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours