நூருல் ஹுதா உமர் 

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் கடந்த 10 வருடகாலமாக பிரதி அதிபராக கடமையாற்றி 31 வருடகால சேவைக் காலத்தினை பூர்த்தி செய்து கடந்த மாதம்  ஓய்வு பெற்ற ஏ.எம். அப்துல் நிஸார் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா பாடசாலை நலன்புரிக் குழுவினால் ஒழுங்கு செய்து பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலீக் அவர்களும் விசேட அதிதிகளாக ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் ஏ.சஹறூன், பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஐ.எம்.இல்லியாஸ் , கணக்காளர் எம்.எம்.றுஷான் ஆகியோரும்  கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் விசேட மலர் வெளியீடும் நடைபெற்றதுடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் நிஸார் அவர்களினால்  பாடசாலை ஆரம்பக் கல்வி மாணவர்கள் பயனடையும் வண்ணம் மாணவர்களுக்காக அடிப்படை தமிழ் அறிவுகளை உள்ளடக்கிய " அமுதமொழி " என்ற நூலும் சகல மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours