தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிறமசிங்க அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டே  பல சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இ.பிரபாகரன் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு  கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் இதன்போது மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட காணி அபகரிப்பானது ஒரு அரசியல் சதி, மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களது பூர்வீக காணிகள் தற்போது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம். ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு சதியாகும்.  இதனை ஏமது கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், சமயத் தலைவர்களது செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும். கிழக்கு மாகாண ஆளுநர் நடுநிலைமையாக செயல்படுவது வரவேற்கத்தக்கது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களது காணிகள் அவர்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இதனை பிழையாக வழிநடத்துகின்றார். ஜனாதிபதியையோ அமைச்சர்களோ இதற்கு உடன்பாடில்லை அரச அதிகாரிகளின் பிழையான செயற்பாடே இதற்கு காரணமாக இருக்கின்றது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டை சுற்றி பேரினவாதிகள் முற்றுகை இடுவதையும் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், மட்டக்களப்பு போதனை வைத்திய சாலையின் CT இஸ்கனர் இயங்காதமையினால் நோயாளர்கள் பாரிய சிரமத்தை  எதிர்கொள்வதாகவும் அறிய முடிகின்றது, இவ்விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் மேலும் கருத்து தெரிவித்தார்.

Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours