(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
கிழக்கிலங்கையின்
மட்டக்களப்பு ஸ்ரீ அமிர்தகழி மாமாங்க பிள்ளையார் ஆலய வருடாந்த
மகோற்ஷவத்தின் தேர்த்திருவிழாவான இன்று வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த
விநாயகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை இடம்பெற்றது.
மங்கள வாத்தியங்கள் முழங்க பிராமண ஆச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க விநாயப் பெருமானின் உள்வீதி வலம்வருதல் இடம்பெற்றது.
பின்னர் விநாயக பெருமான் தேரில் ஆரோகனிக்கப்பட்டு தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் இடம்பெற்றது.
தேர்திருவிழா
நிறைவில் சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் அன்னதானம்
வழங்கப்பட்டதுடன், சாகசாந்தி நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியன ஒருங்கே அமையப்பெற்ற
அமிர்தகழி
ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நாளை
மாமாங்க பிள்ளையார் ஆலய தீர்த்த கேணியில் இடம்பெறவுள்ளதுடன், பிதிர்கடன்
தீர்க்கும் கிரியைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours