முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி பிரதியமைச்சருமான மயோன் முஸ்தபா அவர்களின் மரணச்செய்தி கேட்டு மிகக் கவலையடைகிறேன். அரசியலில் நீண்ட காலம் அவரும் அவரது குடும்பமும் அதிகமான சமூகப்பணிகளை ஆற்றியவர்கள் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவை நிறுவனங்களினூடாக பல்வேறு பட்ட சமூக பணிகளை செய்தவர். எல்லா மக்களோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நற்குணம் கொண்டவர்.
தன்னுடைய அரசியல் காலங்களில் பல்வேறு பதவிகளை வகித்து அதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பல பணிகளை செய்தவர். மர்ஹும் மயோன் முஸ்தபா அவர்களின் நல்ல அமல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக! (ஆமீன்)
அவருடைய குடும்பத்திற்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவரது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours