(கனகராசா சரவணன்)) 


இந்த நாட்டில் காணாமல் போனவர்கள் என்று ஒன்று இல்லை எனவும் அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார் எனவே நீங்கள் ஜனாதிபதி தனே அவர்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரமுடியும் தானே எனவே இவ்வாறான ஜோக்கை நிறுத்துங்கள் இந்த அம்மாக்களுக்கு இந்த நாட்டில் என்றுமே நீதியை பெற்றுக் கொள்ள முடியாது என திருமதி சந்தியா பிரதீப் எக்கினா கொட தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை (30) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையிட்டு இடம்பெற்று சர்வதேசமே எமக்கு நீதிவேண்டும் என கோரிய ஆர்பாட்ட ஊர்வலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போன பிரபல ஊடகவியலாளர் பிரதீப் எக்கினா கொடவின் துனைவியார் சந்தியா கலந்துகொண்டு ஊடகங்களு;கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று பலாத்தகாரமாக  கடத்தப்பட்டு காணாமல் போனவர்களது சர்வதேச தினம் இலங்கையை போன்று உலகில்  நீதிக்காக போராடியவர்களை தன்னிச்சையாக அரச தலைவர்களினது அதிகாரங்களுக்கு  பலியாக்கப்பட்ட தமது அன்பார்ந்த உறவுகளை தேடும் பாதிக்கப்பட்ட உறவுகள்.

வடக்கு கிழக்கில்  பலாத்தகாரமாக காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் கண்ணீரில் மூச்சுவிட்ட பூமி ஆகும். எப்போதும் இந்த பூமியை நேசிக்கின்றேன்  இந்த இடத்துக்கு ஒவ்வொருநாளம் வருவேன் என் என்றால் ஜனவரி 24 ம் திகதி கொழும்பு கொஸ்வத்தை பிரதேசத்தில் பலவந்தமாக எனது கணவரான ஊடகவியலாளரான பிரதீப் எக்கினா கொட கடத்தி செல்லப்பட்டு கடைசியாக அக்கரைப்பற்று இராணுவமுகாமிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

அவர் அங்கு எரிக்கப்பட்டாரா அல்லது  எங்காவது புதைக்கப்பட்டாரா? அல்லது கடலில் கொண்டு சென்று போட்டார்களா? தெரியவில்லை  இருந்தபோதும் இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் பல காரணங்கள் தெரிவிக்க வேண்டியுள்ளது.

ஒ.எம்.பி காரியாலயம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அதிகளவான பணத்தை வீண் செலவு செய்து நடாத்தி வருகின்றது இந்த ஓ.எம்.பி. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை உண்மையாக நீதியாக தேடி கொடுத்துள்ளதா? குறைந்தது உண்மையையாவது அமைப்புகளுக்கு முன்வைத்தா? இல்லை

இந்த தாய்மாருக்கு தேவையானது உண்மையும் நீதியும் அது இந்த நாட்டில் நடைபெறாது என்பதால் தான் சர்வதேச அமைப்புக்களிடம் சொல்லவேண்டியுள்ளது எனவே தெற்கில் இந்த சட்டத்துடன் மிகவும் கூடாதவிதத்தில்  முறையற்ற முறையில் முகம் கொடுக்க வேண்டியுள்ளதுடன் மிகவும் வேதனையை அனுபவிக்க வேண்டியுள்ளது இதனால் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது ஏன் என்றால் இந்த அம்மாக்களுக்கு இந்த நாட்டில் என்றுமே நீதியை பெற்றுக் கொள்ள முடியாது

2022 ஜ.நாவில் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாகன விசாரணைக்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டது  இந்த விசாரணைக்குழு இறுதிவரை இலங்கையக்கு வரவில்லை அவர்களுக்கான விசாவுக்கான அனுமதியை வர்தமானி மூலம் தடைசெய்து அதனை ஜனாதிபதியின் வீட்டு காப்பற்றின் கீழ் போடப்பட்டுள்ளது

எனவே சட்டத்தின் கீழ் அவர்கள் இலங்கைக்கு  வர அனுமதிக்கவும் அதற்கான நீதியை வேண்டி  எங்களுக்கு செய்ய வேண்டிவுரம் என அரசாங்கத்துக்கு தெரிவிக்கின்றேன் என்றர்.  


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours