மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிப்படை வசதிகளற்ற மிகவும்
பின்தங்கிய குடுமி மலைப் பிரதேசத்தில் இ.கி.மிசன் சுவாமி ஜீவனானந்தா சமூக சேவைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது.

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்புக் கிளை  தன்னுடைய நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பயணத்தில் தற்போது 96 வருடங்களைப் பூர்த்தி செய்து இருக்கின்றது.


அது சுவாமி விவேகானந்தரின் இலங்கை  விஜயத்தின் 125 ஆண்டுகள் பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில் 'சுவாமி ஜீவனானந்த சமூக சேவை திட்டம்' என்னும் கிராம நல திட்டத்தை,   கிராமங்கள் தோறும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றிய முன்னாள் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜின் ஞாபகார்த்தமாக இச் சேவைநலத் திட்டம் தற்போதைய பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களால் பிரஸ்தாபித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மிகவும் பின்தங்கிய சேவைகள் தேவையான   பிரதேசங்களில் இத் சமூக சேவை திட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதற் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பகுதியில் 3 கிராமங்களும், சித்தாண்டியை ஒட்டிய பெரிய வட்டுவான், ஈரளக்குளம் போன்ற நான்கு கிராமங்கள் இந்த சேவைப் பணிகளில் பயன் பெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாகக்   குடுமிமலை  பிரதேசத்தில் உள்ள ஆறு குக்கிராமங்கள் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

அங்கு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையிலான தொண்டர் குழுவினர் அண்மையில் அங்கு விஜயம் செய்தனர்.

அங்கு சுவாமி கிராம மட்டத்தில் பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

அங்கு அடிப்படைக் குடிநீர் வசதிகள், அறநெறிப்  பாடசாலைகள்,  மாதந்தோறும் மருத்துவ முகாம்கள்,  பாடசாலை இடைவிலகலைத் தடுக்கும் வண்ணமாக ஆறாம் ஆண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான மேற்படிப்பு வசதிகள் மற்றும் அங்கிருந்து முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவிக்கான உதவித்தொகை போன்றன திட்டமிடப்பட்டுள்ளன. 

வருங்காலங்களில் சுயதொழில் வாய்ப்பை முன்னிறுத்திப் பயிற்சிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இச் சேவைகள்  அத்தகைய அடிப்படை வசதிகளற்ற மிகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

விபுலமாமணி. வி.ரி.சகாதேவராஜா



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours