(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா - 2023 போட்டியானது தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதில் ஓர் அங்கமான மாகாண மட்டப் போட்டிகள் மட்டக்களப்பு பிள்ளையாரடி மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்றது.
இந்தப் போட்டிகளில் சுமார் 15 க்கு மேற்பட்ட மத்திய நிலையங்கள் பங்குபற்றியிருந்தன. அதில் முஸ்லிம் பிரிவில் சுமார் 07 மத்திய நிலையங்கள் கலந்து கொண்டன.
இந்த கிழக்கு மாகாண மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் முதல் முறையாகக் கலந்து கொண்டு சிரேஷ்ட நிகழ்ச்சியான கோலாட்டம் போட்டியிலும் மற்றும் கனிஷ்ட நிகழ்ச்சியான ரபான், கோலாட்டம் போட்டியிலும் கலந்து கொண்டது. இந்த இரண்டு பிரிவுகளில் கோலாட்டம் சிரேஷ்ட நிகழ்ச்சியில் 83 புள்ளிகளைப் பெற்று சாய்ந்தமருது வரலாற்றில் முதலாவதாகக் கலந்து கொண்ட போட்டியிலேயே முதல் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு சாய்ந்தமருதுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரலாற்றுச் சாதனை படைந்துள்ளனர்
அதேபோல் மற்றுமொரு சாதனையாக கனிஷ்ட பிரிவு போட்டியில் ரபான் கோலாட்டம் 73 புள்ளிகளோடு இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது.
இது சாய்ந்தமருது வரலாற்றில் பாரியதொரு வெற்றியாகும். ஏனெனில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் திறந்து எட்டு மாத காலப்பகுதியில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த மத்திய நிலையங்களை வீழ்த்தி இவ்வெற்றிச் சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.
இந்த வெற்றியில் கலந்து கொண்ட கோலாட்ட பிரிவு மாணவர்களான எம்.எப்.எம்.றிஹ்பத், ஏ.ஜீ.எம்.ஆஸிப், என்.ஹம்தி, என்.எம்.இஷாம், ஜே.எம்.றிப்காஸ், என்.நப்ரின், ஜே.எம்.ஷாபீத், என்.எம்.அல்தாப், ஏ.எம்.எம்.நுஸ்கி, என்.எம்.எம்.றுக்ஸான், ஏ.எம்.அஸ்ரி, ஏ.எம்.ஹபீஸ், ஜே.எம்.ஜகி, ஏ.எம்.எம். அர்ஷிக், எப்.எம்.ஹசீன், எஸ்.எம்.சௌஸான், எச்.எம்.அப்ரத், ஜே.எம்.சஹ்ரான், என்.ரீ.எம்.அஸ்ரிப் மற்றும் ரபான் கோலாட்ட பிரிவு மாணவர்களான ஜே.எம்.ஜரிஹ், எம்.எப்.எம். அஸ்பல், எம்.எப்.எம்.பஹட் , ஏ.ஆர்.எம்.சப்கி, என்.அமைத் அஹமட், எஸ்.எம்.ஏ.மஹ்தி, எம்.ஆர். இஸ்ஸத், எம்.ஐ.எம்.அபான், எஸ்.எம். ஆதிப், எம்.பிஸ்மில்லாஹ், எம்.ஏ.எம்.அப்துல் ஹாதி, எப்.எம்.பர்ஹான், ஆர்.ஏ.எம்.அஹ்னாப், மற்றும் கலாசார மத்திய நிலையத்தில் இம் மாணவர்களைப் பயிற்றுவித்த வளவாளர்களான,
எம்.ஐ.எம். அமீர் (ஆசிரியர்)
எம்.ஐ. அலாவுதீன்
எம்.எச். பைசர்
ஏ.எல்.எம். சாஜி (ஆசிரியர்)
மற்றும் எஸ்.எச்.ஏ. கபூர் (வாத்தியம்) மற்றும் கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்
ஏ.பி. நௌசாத் ஆகியோர் உட்பட வெற்றிக்காகப்பங்கு பற்றி பாடுபட்ட அனைவருக்கும் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் வாழ்த்துக்களோடு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நீண்ட காலமாக கலாசார நிகழ்வுகள் தொடராக நடந்து வருகிறது. இருந்த போதிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தை வைபவ ரீதியாக இன்னும் திறக்கப்படாத நிலையிலும் இவ்வெற்றி கிடைத்தமை சவாலானதொரு விடயம்.
இதேவேளை இவ்வெற்றிக்காக முழுமூச்சாகவும் பக்க பலமாகவும் இருந்து மாணவர்கள் மத்தியில் இரவு-பகல் பாராது அயராது செயற்பட்டு இவ்வெற்றிக்கு காரணகர்த்தாவாகவும் உந்து சக்தியாகவும் அமைந்த நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான், இதற்கு பின்புலமாக இருந்து செயற்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் மற்றும் இம்மாணவர்களை போட்டியில் பங்குபற்ற அனுமதி வழங்கிய கல்முனை சாஹிராக் கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபீர் மற்றும் சாய்ந்தமருது அல்-ஜலால் பாடசாலை அதிபர் எஸ். சைபுதீன் மற்றும் மாணவர்கள் இம் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கும் நன்றி தெவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours