( காரைதீவு சகா)
அம்பாறை
மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்த மூன்று மாத கால சமூகசெயற்பாடு
சான்றிதழ் கற்கைநெறி பிரதி சனிஞாயிறு தினங்களில் கிரமமாக நடைபெற்று
வருகிறது.
இதன்
அங்குரார்ப்பண வைபவம் கடந்த(22) சனிக்கிழமை பெண்கள் வலையமைப்பின் தலைவி
திருமதி தியாகேஸ்வரி ரூபன் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்
நடைபெற்றது.
வலையமைப்பின்
பொதுச்சபை இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரனின் ஒழுங்கமைப்பில் வகுப்புகள்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று ஞாயிறு முழு நேர செயலமர்வை சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நடாத்தியிருந்தார்.
ஊடகம் மற்றும் சமூக வலைத் தளங்களின் தாக்கம் தொடர்பாக அவரது முன்வைப்பு அமைந்திருந்தது.
வலையமைப்பின்
செயற்பாட்டு இடம் பெறும் மாவட்டத்தின் ஆறு பிரதேசங்களில் இருந்து நாற்பது
யுவதிகள் இப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்..
Post A Comment:
0 comments so far,add yours