(அஸ்ஹர் இப்றாஹிம



அம்பாறை மாவட்டத்திலுள்ள மருத்துவ பரிசோதனை நிலையமொன்றில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக தொகைக்கு இரத்தமாதிரி பரிசோதனை அறிக்கை வழங்கிய இரு மருத்துவமனை உரிமையாளர்களுக்கு எதிராகத் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தலா 1 இலட்சம் ரூபா தண்டப்பணம்  அறவிடப்படப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சகலிய பண்டார தெரிவித்தார் .

இவ்வாறு பாவனையாளர்களுக்கு எதிராக செயற்படுவோர் சம்பந்தமான முறைப்பாடுகளை 1977 என்ற இலக்கத்திற்கு அல்லது 0632222355 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours