1000க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கிடையிலான
கல்முனை வலயமட்ட சமூக விஞ்ஞான போட்டி (பரீட்சை) அண்மையில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது.
இப்போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய கல்முனை மஹ்மூத் மகளிர் தேசியக் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வலயமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் (பரீட்சை) எம்.என்.பாத்திமா ஹப்ஸா [ தரம் 7 ], எஸ்.எப்.ஸயிஸ்டா ஸஸ்பா [ தரம் 8 ], எப்.எப்.ஸம்ஹா [ தரம் 10 ] , ஏ.ஆர்.பாத்திமா ஹுதா [தரம் 13 ] ஆகிய மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களான இணைப்பாளர் எஸ்.எம். அமான் (தரம் - 13), குடியியற்கல்வி பாட இணைப்பாளர் எஸ். ஜெஸ்மின் (தரம் - 08), வரலாறுபாட இணைப்பாளர் எஸ்.எல்.எம். பாயிஸ், சமூக விஞ்ஞான ஆசிரியர்களான
எம்.ஜ. சஹனியா (தரம் - 07), எச்.எம். றுவைதா (தரம் - 10) ஆகியோரையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை, உதவி அதிபர் ஏ.எச். நதீரா மற்றும் வரலாறு குடியியற்கல்வி பாட ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours