தர்மேந்திரா


இந்தியாவின் மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Lyca Productions, இலங்கையில் நவீன வசதிகள் படைத்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது. 
இந்தியாவில் சிறந்த திரைப்பட தயாரிப்பு வசதிகளை கையாண்டுள்ள இந்நிறுவனம், இலங்கையர்களுக்கு திரைப்பட தயாரிப்பு தொடர்பான நவீன தொழில்நுட்ப அறிவை வழங்கி, உள்நாட்டு திரைப்படத் துறையை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. 

இந்த ஸ்தாபிப்பு தொடர்பாக அறிவிக்கும் கலை நிகழ்வில் கடந்த வாரம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் உள்நாட்டு நட்சத்திரங்களுடன், தென்னிந்திய திரையுலகின் புகழ் பெற்ற ஜாம்பவான்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். 

இலங்கையில் 06 திரைப்படங்களை தயாரிப்பது தொடர்பான சம்பிரதாய அறிவிப்பை அதன்போது லைக்கா நிறுவனம் வெளியிட்டது. இதில் இலங்கையின் உலக பிரசித்தி வாய்ந்த அதிவேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின்  வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிப்பது குறித்தும் அறிவிக்கப்பட்டது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours