( எம்.எம்.றம்ஸீன்)
நிந்தவூரில்
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேகபூர்வ, சமாதான, நல்லிணக்க கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நிந்தவூர் அல்-மதீனா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ஐ.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகளான ஏ.முபாறக் அலி, டீ.எம்.சமரசேகர ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், நிந்தவூர் பிரதேச செயலக நிருவாக கிராம சேவக உத்தியோகத்தர் ஏ.எல்.பைரூஸ், அல்-மதீனா தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.ஹில்மி, அட்டப்பள்ளம் சஹிதா வித்தியாலய முன்னாள் அதிபர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ், அல்-மினா வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.ஏ.றாபிஊ, ஆலையடிவேம்பு பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி செல்வி.எஸ்.சுபாசினி ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours