நூருல் ஹுதா உமர்
சமூக அபிவிருத்தி நிறுவனம் காரைதீவு ஸ்பீட் நிறுவனத்துடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் 10 கிராமங்களை உள்ளடக்கியதாக சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இச் செயற்பாடுகள் ஊடாக 10 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கிராம ஒத்துழைப்பு மன்ற அங்கத்தவர்களின் இயலுமையை வழுப்படுத்தி அவர்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பல்வேறு சமூக முரண்பாடுகளையும் ஏற்படுத்துகின்றது. இதனை குறைக்கும் நோக்குடன். குறிப்பிட்ட கிராம ஒத்துழைப்பு மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை ஊக்கப்படுத்தும் நோக்குடன் பயிர் செய்கையை மேற்கொள்வதற்கான உபகரணங்களும், உலர் உணவு பொதியும் வழங்கும் நிகழ்வு காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் சமூக அபிவிருத்தி நிறுவன பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக்க அபேவிக்கிரம அவர்களும், கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் சிறப்பதிதியாக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்பான், பங்காளர் நிறுவனமான ஸ்பீட் நிறுவன செயலாளர் வீ ஜனார்த்தனன், உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான வலையமைப்பு (TRF) மற்றும் இத் திட்டத்துக்கான ஸ்பீட் நிறுவன இணைப்பாளர் எம்.ஐ.றியால், அதன் அங்கத்தவர்களும் கிராம ஒத்துழைப்பு மன்ற அங்கத்தவர்களும் கலந்து கொண்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours