(எம்.எம்.றம்ஸீன்)

கல்முனை  இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 
 "English language Development Academy" (ELDA) நிறுவனத்தின் வருடாந்த சிறுவர் ஆங்கில பயிற்சி முகாமும், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை (26) பொத்துவில் நாவலாறுப் பிரதேசத்தில் நடைபெற்றது.

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஈ.எல்.டீ.ஏ. நிறுவனத்தின் தவிசாளர்  ஏ.ஜி.எம்.றிசாத் , பணிப்பாளர் டீ.கே.எம்.மௌசீன் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆங்கில விருத்திக்குப் பொறுப்பாக இருந்து செயல்படும் பயிற்சி பெற்ற வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்  பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சங்களான ஆங்கிலப் பாடநெறியில் அதிக பயிற்சிகளைப் பெற்று தங்களது ஆளுமைகளையும், திறமைகளையும் வெளிக்காட்டும் போட்டி நிகழ்ச்சிகளில் சகல மாணவர்கள்களும் பங்கு பற்றினார்கள்

. சிறந்த நடுவர்களை கொண்டு நடாத்தப்பட்ட போட்டிகளில்  வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு " சம்பியன் " கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours