(வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை
சுகாதார அமைச்சின் ஆயுர்வேத திணைக்களம் வைத்தியர்களிடையே நடாத்திய தேசிய
விருது வழங்கல் போட்டியில் சிறந்த ஆயுள்வேத வைத்தியராக காரைதீவு ஆயுர்வேத
வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சீ.எம். காலித் "வைத்திய கலாசூரி"
என்ற ஜனாதிபதி விருது பெற்றார்.
இந்த
விருதுக்காக நாடளாவிய ரீதியில் 17,000 ஆயுள்வேத வைத்தியர்கள்
விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களில் பாரம்பரிய வைத்தியர்கள் பட்டதாரி
வைத்தியர்கள் அடங்குவார்கள் .இந்த 17,000 பேரில் 120 வைத்தியர்கள் தேசிய
மட்டத்தில் "வெததுறு அபிமன் " வைத்தியசூரி ஜனாதிபதி விருது
வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.
அவர்களுக்கான
விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு
மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நடைபெற்றது .
அங்கு
கிழக்கு மாகாணத்தில் இருந்து மூவர் மாத்திரமே இவ்விருதுக்கு தெரிவு
செய்யப்பட்டிருந்தார்கள். அதிலும் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஒரே
ஒருவராக டாக்டர் காலித் தெரிவாகியிருந்தார்.
சம்மாந்துறையைச்
சேர்ந்த டாக்டர் காலித் வைத்தியத்துறையில் 20 வருட கால அனுபவம் பெற்றவர்.
காரைதீவு பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலையில் பல அபிவிருத்தி திட்டங்களை அண்மை
காலங்களில் சிறப்பாக மேற்கொண்டு வந்தவர். இதனால் மக்களின் அன்பும்
அபிமானமும் பெற்றவர்.
மக்களோடு இனிமையாக பேசிப் பழகும் இவர் இலக்கியவாதியாகவும் திகழ்வது மற்றுமொரு ஆளுமையாகும்.
Post A Comment:
0 comments so far,add yours